“சினிமா வாழ்விற்கு விடை கொடுக்கும் பிரபல ஹாலிவுட் நடிகர்”…. சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்…!!!!

சினிமாவில் இருந்து விடைபெறப் போவதாக பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரி அறிவித்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகரான ஜிம் கேரி ” The Sex and Violence Family Hour” திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் வாழ்க்கையில் பல சோகக் கதைகள் இருந்தாலும் சினிமாவின் மூலம் சிறந்த நகைச்சுவை நடிகராக அனைவரையும் சிரிக்க வைத்தார்.

இவர் இதுவரை 42 திரைப்படங்கள், 17 டிவி தொடர்கள், 16 ஆவணப்படங்கள், ஒரு வெப் சீரிஸ் என நடித்த இவருக்கு 60 வயதாகும் நிலையில் திடீரென சினிமாவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் நடிப்பில் “Sonic the hedgehog 2” வெளியாக உள்ள நிலையில் இத்திரைப்படம் தான் தனக்கு கடைசி திரைப்படம் என கூறியுள்ளார். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *