சினிமா, டிவி நிகழ்ச்சியில்….. குழந்தைகள் நடிக்க தடை?….. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது “3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும்.

குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவும், இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்றவோ அனுமதிக்க கூடாது. கேலிக்கு ஆளாகும் பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது. இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இல்லையெனில்  மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *