சினிமாவை மிஞ்சும் சம்பவம்…. பாம்பிற்கும், மனிதனுக்கும் இடையே நடக்கும் போர்…. இறுதியில் முடிவு என்ன…?

உத்திரபிரதேசத்தில் தனது ஜோடியை கொன்றவரை ஏழுமுறை பாம்பு தீண்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1979 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற  முன்னணி நடிகர்களின் நடிப்பில் துரை என்பவரின் இயக்கத்தில் வெளியான  படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்ற 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. பாம்பு இச்சாதாரி என்ற நிலையை அடைய கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளாக  தவம் இருக்க வேண்டும். அப்போது தான் அத்தகைய வல்லமை கிடைக்கும் என்பது போல கதையில் கூறப்பட்டிருக்கும்.

இது போன்ற பல கதைகள் சொல்லப்பட்டாலும், தற்போது உத்தரபிரதேசத்தில் இது போன்ற ஒரு உண்மைச்சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது தனது ஜோடியை கொன்றவரை 7 முறை  ஒரே பாம்பு கடித்திருக்கிறது. இதில் அந்த மனிதர் 7 முறையும் உயிர் பிழைத்திருக்கிறார்  என்பதுதான் பெரிய விஷயம். உத்தரபிரதேச மாநிலம்  ராம்பூர் மாவட்டம் ஸ்வார் தெஹ்சில் மிர்சாபூர் பகுதியில் எஹ்சான் என்ற பப்லு விவசாய பண்ணையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய வீட்டின் அருகே ஒரு இடத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து இருந்துள்ளது. இதை பார்த்ததும் எஹ்சான் அந்த ஜோடியில் ஆண் பாம்பை கொன்றுள்ளார். பெண் பாம்பு உடனே அங்கிருந்து தப்பி எங்கேயோ சென்றுவிட்டது.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவர் வீட்டில் இருந்தபோது வீட்டிற்குள் எப்படியோ வந்த பாம்பு இவரை தீண்டியிருக்கிறது. இதனால் வலி பொறுக்க முடியாமல் எஹ்சான்  அலறியுள்ளார். அந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் உயிர் பிழைத்து வீட்டுக்கு வந்தார். ஆனால், மறுபடியும் அதே பாம்பு அங்கு வந்து, அவரை மீண்டும் அவரை கடித்துவிட்டது. இப்படியே ஒரே பாம்பு மொத்தம் 7 முறை தீண்டியுள்ளது. ஆனால் 7 முறையும் அவர் உயிர் தப்பி உள்ளார்.
7முறையும் அக்கம்பக்கத்தினர்தான் இவர் உயிரை காப்பாற்றியிருக்கின்றனர். 7 முறை பாம்பு கடித்தால் தான் ஏற்கனவே பாம்பு ஒன்றாக இருக்கும்போது அதில் ஒன்றை மட்டும் கொன்றது தான் இதற்கு காரணம் எனவும், அதுதான் இப்படி வந்து தன்னை பழிவாங்குகிறது என்றும் எஸ்ஸான் அலி வலுவாக நம்புகிறாராம். பாம்புக்கும் எஹ்சானுக்கும் இடையே நடக்கும் இந்தப் போரில், இயற்கையும் இருவருக்குமே துணை நிற்கிறது. ஆனால் இந்தப் போரின் முடிவு என்னவாகும் என்பது யாருக்கும் தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *