“சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் குஷ்பூ-சுந்தர்.சி மூத்தமகள்”….. குவிந்து வரும் வாழ்த்துக்கள்….!!!!

குஷ்புவின் மூத்த மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் குஷ்பூ. இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். இவர் முறைமாமன் திரைப்படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் வளர்ந்து திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு அவந்திகா, அனந்திதா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் குஷ்பு தனது மூத்த மகள் அவந்திகா விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது, எனது மூத்த மகள் அவந்திகா லண்டனில் நடிப்பு பயிற்சிப் படிப்பை முடித்துள்ளார். அவரே தனக்கான இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள விரும்புவதால் அவருடைய போராட்டம் தற்போது ஆரம்பமாகின்றது. நாங்கள் அவரை வைத்து படம் எடுப்பது அல்லது அவரை எங்கேயும் பரிந்துரைக்கவும் செய்யப்போவதில்லை. எனவே அவருக்கு உங்கள் அனைவரின் ஆசீர்வாதம் தேவைப்படுகின்றது என கூறியுள்ளார். இந்நிலையில் குஷ்புவின் மகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *