சித்ரா பௌர்ணமி அன்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றால் சிவபெருமானின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி இன்று அதிகாலை 4.16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 5.47 மணிக்கு நிறைவடைகிறது. இன்று 14 கிலோ மீட்டர் தொலைவில் கிரிவலம் செல்லலாம். கிரிவலம் செல்ல இயலாதவர்கள் அருகிலுள்ள சிவன் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தை 11 முறை சுற்றி வந்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம்.