தெலுங்கானா மாநிலத்தில் உள்ள குமரன் பீர் மாவட்டம் துப்பாக்குடா பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுஜாதா என்ற மனைவி உள்ளார். நேற்று கணவன் மனைவி இருவரும் விவசாய நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு பதுங்கி இருந்த புலி திடீரென சுரேஷை தாக்கியது. அவரது கழுத்து மற்றும் உடல் பாகங்களில் படுகாயம் ஏற்பட்டதால் அவர் வலியில் அலறி துடித்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுஜாதா கற்களை எடுத்து புலி மீது வீசி சத்தம் போட்டார் இதனால் புலி அங்கிருந்து தப்பித்து வனப்பகுதிக்கு சென்றது. உடனே சுஜாதா அருகில் இருந்தவர்கள் உதவியோடு தனது கணவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.