சிங்கங்களுக்கு அக்பர், சீதா என பெயர் வைத்த IFS அதிகாரி பரபின் லால் அகர்வாலை பணியிடை நீக்கம் செய்து திரிபுரா அரசு உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சிலிகுரி சபாரி பூங்காவில் உள்ள பெண் மற்றும் ஆண் சிங்கங்களுக்கு அக்பர் மற்றும் சீதா என பெயர் சூட்டியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இவற்றை ஒரே பகுதியில் அடைப்பதற்கு எதிராக வி.எச்.பி. அமைப்பு, உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கில் ‘இவ்வாறு பெயர் வைத்து தேவையற்ற சர்ச்சையை உண்டாக்குவதாக’ நீதிபதி கேள்வி எழுப்பியிருந்தார்.