சிக்னல் செயலியை பயன்படுத்தும் பேஸ்புக் நிறுவனர்…. வெளியான தகவல்…!!!

பேஸ்புக் நிறுவனரே தனது உரையாடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக சிக்னல் செயலியை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.

53.3 கோடி பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் அத்துடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்கின் போன் நம்பரும் லீக்காகி உள்ளதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மார்க் ஜூகர்பெர்க் தனது உரையாடல்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக வாட்ஸ்அப் பயன்படுத்தாமல் சிக்னல் செயலி பயன்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.