அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக சிறையில் இருந்தார். அதன் பிறகு அவருக்கு சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் 25 லட்சம் பிணையுடன் நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றார்.

இந்த ஜாமீன் மனுவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இந்நிலையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் தற்போது கூடுதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. மேலும் அதன்படி அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார், உதவியாளர் சண்முகம் உட்பட 13 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.