சிகிச்சைக்காக தங்கியிருந்த பெண்….. வைத்தியர் செய்த காரியம்….. போலீஸ் நடவடிக்கை….!!!

பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 37 வயதுடைய பெண் வசித்து வருகிறார் நடக்க முடியாமல் சிரமப்பட்ட பெண் பல்வேறு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவரால் நடக்க இயலவில்லை. இந்நிலையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரிடம் அழைத்துச் செல்லப்பட்ட பெண் 2 மாதங்கள் அவர் வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் பெற்றோர் அந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது வைத்தியர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பெண் தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். பின்னர் பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதனை அடுத்து வைத்தியர் கோபாலனை  போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி  சிறையில் அடைத்தனர்.