சாலை விபத்துகளை தடுக்க…. ரூ.2 கோடியில் 4 வழிச்சாலை…. அரசு வெளியிட்ட தகவல்….!!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோடு வழியே தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு போகும் முக்கிய சாலை என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். இந்நிலையில் பொள்ளாச்சியிருந்து புளியம்பட்டி வரை 4 வழிசாலை அமைக்கப்பட்டு இருக்கிறது. ராசக்கா பாளையத்தில் மட்டும் இருவழிச்சாலையாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த சூழ்நிலையில் விபத்துக்களை தடுப்பதற்கு இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது.

இதனால் சாலை பணிக்கு இடையூறாகவுள்ள மரங்களை வெட்டி அகற்றும் பணியானது நடந்து வருகிறது. அத்துடன் மாற்றியமைக்கப்படவுள்ள மின் கம்பங்களில் அடையாள குறியீடு போடப்பட்டுள்ளது. இது பற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியிருப்பதாவது “பல்லடம் ரோடு ராசக்காபாளையத்தில் ½ கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் 2 கோடியில் இருவழிச்சாலையை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதற்காக சாலை பணிக்கு இடையூறாக 31 மரங்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

இவற்றில் வேம்பு, அரசமரம், ஆலமரம் உட்பட 19 மரங்களை வேரோடு தோண்டி எடுத்து, அதே சாலையில் மறுநடவு செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. மீதம் உள்ள 12 மரங்கள் மட்டும் வெட்டி அகற்றப்படுகிறது. அதுமட்டுமின்றி 12 மின்கம்பங்கள் மாற்றியமைக்கப்படுகிறது. இப்பணிக்கு மின் வாரியத்தில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இப்போது மரங்கள் வெட்டி அகற்றும் பணியானது நடந்து வருகிறது. அதன்பின் மின்கம்பங்களை மாற்றியமைத்து, பணிகளை தொடங்கி 3 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *