சாலை விபத்தில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் வீரர் இறப்பு…. பெரும் சோகம்…..!!!!!

மேகாலய மாநிலத்தில் நேற்று நடைபெற்ற சாலைவிபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த டேபிள்டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன் (18) பரிதாபமாக இறந்தார். அதாவது 83-வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக தீனதயாளனும், 3 வீரர்களும் அசாம் மாநிலமான கவுகாத்தியிலிருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது எதிரேவந்த லாரி டிரைவர் தன் கட்டுப்பாட்டை இழந்ததால் சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதனால் கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கிடையில் மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். இதில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையில் தீனதயாளனின் உடல் இன்று காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுஉள்ள தீனதயாளன், வருகிற 27ஆம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்கவுள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொள்ள இருந்தார். தற்போது அவருடைய மறைவிற்கு இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பின் தலைவரான துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்து உள்ளார். மேலும் அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *