பிரபல யூடியூபர் இர்பான். இவர் தன்னுடைய யூடியூப் சேனலில் உணவு சம்மந்தமாக பல்வேறு வீடியோக்களை வெளியிட்டுள்ளார். தற்போது இவர் சாலை விதியை மீறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர்  சாலையில் செல்லும்போது ஹெல்மெட் அணியவில்லை. அதோடு முறையான நம்பர் பிளேட் இல்லாமல் விலை உயர்ந்த பைக்கில் சென்றுள்ளார். இதனை வீடியோ எடுத்து ஒருவர் காவல்துறையின் சமூக வலைத்தளத்தில் இணைத்துள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு அபராதம் விதிக்கப்படுமா என்று  கேள்வியும் எழுப்பி உள்ளார். இதையடுத்து ஹெல்மெட் அணியவில்லை என்பதற்காக அவருக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்கு 500 ரூபாய் அபராதமும் மொத்தம் 1500 ரூபாய் விதிக்கப்பட்டது.

இதற்கு முன்பாக தனது மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று தெரிந்து கொண்டுள்ளார். அதனை வீடியோவாக யூடியூபில் வெளியிட்டுள்ளார் . இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று இவ்வாறு குழந்தையின் பாலினத்தை அறிந்த வீடியோவை பொதுவெளியில் வெளியிடுவது தவறாகும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக சுகாதாரத்துறையில் இருந்து  அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதோடு யூடியூபில் வெளியிட்ட வீடியோவை நீக்க வேண்டும் என்றும் கருவின் பாலினத்தை அறிவது சட்டப்படி குற்றம் என்றும்  மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மருத்துவத் துறை எச்சரித்தது. மேலும் இந்த சம்பவம் குறித்து இர்பான் அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.