நாமக்கல் மாவட்டத்தில் மஜீத் தெருவில் முபாரக் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக வீடு இல்லை அதனால் பள்ளிவாசல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் தங்கி வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு குடிநீர் தொட்டி அருகே சாலையோரமாக முபாரக் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவு 12 மணியளவில் திடீரென அவரது ஆடையில் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து தகவல் அறிந்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் முபாரக் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் மது குடித்துவிட்டு புகை பிடித்த போது ஏற்பட்ட தீ முபாரக் ஆடையில் பற்றி இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் முன்விரோதம் காரணமாக யாராவது மர்மநபர் தீயை பற்ற வைத்துவிட்டு சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.