“சாலையில் லாரி சக்கரம் பதிந்ததால் குழாய் உடைந்து ஆறாக ஓடியது”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

லாரியின் சக்கரம் சாலையில் பதிந்ததால் குழாய் உடைந்து தண்ணீர் கசிந்ததால் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.வி ரோட்டில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை பணி, குடிநீர் திட்ட பணிகள் ஆகியவை நடந்த பொழுது சாலை தோண்டபட்டு மேடு பள்ளமானது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அங்கு தார் சாலை போடப்பட்ட நிலையில் ஆர்.கே.வி ரோடு கருங்கல்பாளையம் மீன் சந்தை அருகே நேற்று காலை ஜல்லி பாரம் ஏற்றி வந்த மினி லாரி ஒன்று அவ்வழியாக சென்ற பொழுது ரோட்டில் ஒரு பகுதியில் மினி லாரியின் சக்கரம் பதிந்ததால் குடிநீர் பீறிட்டு வந்து ரோட்டில் ஆறு போல் ஓடியது.

தார்சாலை போடும் பொழுது குடிநீர் குழாயை சரியான பாதுகாப்புடன் பதிக்கப்படாததால் தற்பொழுது குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து இருக்கின்றது. இதனால் தண்ணீர் வீணானது. மேலும் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தார்கள். பின் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்பட்டு தண்ணீர் கசிவது தடுக்கப்பட்டது. இது பற்றி சமூக ஆர்வலர் ஒருவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு பணியும் ஒப்பந்ததாரர்கள் மூலம் செய்யப்படுகின்ற நிலையில் அவர்கள் பணியை சரியாக செய்யாமல் போவதால் பொதுமக்களுக்கு சிரமமும் அரசுக்கு இழப்பும் ஏற்படுகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது அரசும், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *