சாலையில் நடந்து சென்ற பெண்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. போலீஸ் வலைவீச்சு…!!

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பாலாக்குடி காளியம்மன் கோவில் தெருவில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வள்ளி பாலாக்குடி பிரதான சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனம் இவர் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த வள்ளியை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு வள்ளியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதுகுறித்து வள்ளியின் கணவர் கேசவன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர் வள்ளியின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருசக்கர வாகனத்தை போட்டுவிட்டு தப்பித்து சென்ற சுசீந்திரன் என்ற நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *