சாலையில் நடந்து சென்ற நபர்…. அதிவேகமாக வந்த கார்…. பின் நடந்த சோகம்…!!

கார் மோதி முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தை அடுத்த ஆசூர் என்னும் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரான ஏழுமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தீவனூரிலிருந்த ரெட்டணை செல்லும் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது திண்டிவனத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற கார் ஒன்று ஏழுமலை மீது மோதியுள்ளது. இதனால் படுகாயமடைந்த ஏழுமலையை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்பிறகு புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் ஏழுமலை மேல்சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஏழுமலை பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து புகாரின் பேரில் ரோஷன் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *