விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பழைய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து நேற்று மதியம் அரசு டவுன் பேருந்து ஒன்று கிளம்பியது. இந்த பேருந்து முடங்கியாறு சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்து சாலையில் விழுந்தது.

உடனடியாக ஓட்டுனர் பேருந்து நிறுத்தி உடைந்து விழுந்த படிக்கட்டை எடுத்துவிட்டு பணிமனைக்கு சென்றார். அந்த சமயத்தில் பேருந்து படிக்கட்டில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இதுபோன்ற பேருந்துகளை இயக்கக் கூடாது எனவும் நல்ல பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும் எனவும் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.