சாலையில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து…. காயமடைந்த 8 பேர்…. கோர விபத்து…!!

ஆம்னி பேருந்து சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் இருந்து ஆம்னி பேருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மோட்டார் சைக்கிள் ஒன்று குறுக்கே வந்தது. அப்போது மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக ஆம்னி பேருந்தின் ஓட்டுநர் வாகனத்தை திருப்பியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி பேருந்து சாலையில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சந்தியா, புஷ்பா உள்பட 8 பேர் கைமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *