மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் சாலைகள் கடும் சேதமடைந்துள்ளதாக தொடர்ந்து பொதுமக்கள் மனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்த பகுதிக்கு வந்த ஆற்றல்துறை அமைச்சர் பிரதுமன் சிங் தோமார், புகார் அளிக்க வந்த ஒரு நபரின் கால்களை கழுவி மன்னிப்பு கேட்டுள்ளார்.

அப்போது அவர், இந்த பகுதியில் சாலைகள் மோசமான நிலையில் இருப்பதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். தற்போது பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. விரைவில் சாலைகள் சீர் செய்யப்படும் என கூறினார். இந்த புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது.