குஜராத்தில் உள்ள பாவ்நகர் பகுதியில் ஒரு ரயில்வே தண்டவாளம் உள்ளது. இந்த ரயில்வே தண்டவாளத்தை சிங்கம் ஒன்று கடந்த நிலையில் வனத்துறை ஊழியர் ஒருவர் அதனை சற்றும் பயமின்றி ஒரு குச்சியால் விரட்டுகிறார். அவர் ஆடு மாடு குச்சியால் விரட்டுவது போன்ற துணிச்சலாக அந்த சிங்கத்தை அங்கிருந்து விரட்டினார்

. அந்த சிங்கமும் அவரை எதுவுமே செய்யாமல் அங்கிருந்து நகர்ந்து போனது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. மேலும் பலரும் அந்த ஊழியரின் துணிச்சலை பாராட்டி வருகிறார்கள்.