சாமி கும்பிட கனவுகளோடு வந்த குடும்பம்…. கண்ணீரில் மிதந்த உறவினர்கள் ..!!

தமிழக – கர்நாடகா எல்லையில் டிராக்டர் கவிழ்ந்து 6 பேர் உயிரிழந்தனர், 20 பேர் காயம் அடைந்தனர்.

கர்நாடக மாநிலம் கனகபுரா மாவட்டத்தில் இருந்து தமிழக எல்லையில் அமைந்துள்ள மஞ்சுகொண்ட பள்ளி உள்ளிட்ட கோயிலுக்கு டிராக்டரில் ஏராளமானோர் வந்துள்ளனர். தெப்பக்குழி கிராமத்தில் எதிரே வந்த வாகனம் மோதியதில் டிராக்கடர் கவிழ்ந்து விபத்து நேரிட்டது. இதில் கனகபுரா மாவட்டம் கேரலுறு சிந்திரா கிராமத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலும், மேலும் ஒருவர் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை மீட்டதுடன்  காயமடைந்த இருபது பேரை மருத்துமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.