சாதி திமிரு….. கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பில் இருந்து நீக்கம்…. கோட்டாட்சியர் அதிரடி….!!!!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகில் உள்ள பஞ்சாகுளத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடும்போது இரு பிரிவு இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு சாதியை சொல்லி திட்டி இரண்டு நபரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து நான்கு பேர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு நெல்லை மாவட்ட 2 வது செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்ற வருகிறது. சமீபத்தில் அந்த கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் தின்பண்டம் வாங்குவதற்காக பெட்டி கடைக்கு சென்றபோது அதன் உரிமையாளர் குழந்தைகளிடம் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் தின்பண்டங்கள் வாங்க வரவேண்டாம், தர மாட்டார்கள் என்று வீட்டில் பொய் சொல்லுங்கள் என்று கூறினார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக கரிவலம்வந்தநல்லூர் போலீஸர் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரன்(22), பெட்டிக்கடை உரிமையாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரின் கைது செய்தனர். மேலும் குமார், சுதா, முருகன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றன. அதனை தொடர்ந்து மகேஸ்வரன் பெட்டி கடைக்கு வருவாய் துறை சீல் வைத்தனர். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஊருக்கு நுழைவதற்கும் தடை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பஞ்சாகுளம் கிராமத்திற்குள் தடுப்புகள் வைக்கப்பட்டு போலீஸ்காவல் போடப்பட்டுள்ளது. கிராமத்திற்கு செல்லும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு ஊருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஊருக்கு செல்லும் வாகனங்களில் எண்கள் அவரது பெயர்கள் குறிக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகிறது. இதன் மூலம் அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாகுளத்தில் கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பில் இருந்த மல்லிகாவை கூடுதல் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதில் கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பனை நியமித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.