வயது எவ்வளவாக இருந்தாலும் எதையாவது சாதிக்க முடியும் என்று நாம் நினைத்தால் அதனை நடத்திக் காட்டலாம். அதன்படி இணையத்தில் சமீபத்தில் வெளியான வீடியோவில் வயதான பெண் ஒருவர் ஜிம்னாஸ்டிக்ஸ் செய்து காண்போரை சிலிர்க்க வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்த மூதாட்டிக்கு 70 வயது இருக்கலாம் என்று யூகித்த நிலையில் மூதாட்டி ஜோஹன்னா குவாஸின் வயது 98 என்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

இவர் தன்னுடைய 10 வயதிலிருந்து ஜிம்னாஸ்டிக்ஸ் இல் இருந்து வருகிறார். ஜெர்மனியில் பிறந்த இவர் கடந்த 2012 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான ஜிம்னாஸ்ட் என்ற பட்டத்துக்கான கின்னஸ் உலக சாதனையை பெற்றுள்ளார். அப்போது அவருக்கு 86 வயது. தற்போது 12 ஆண்டுகள் கழித்து இவர் முன்பை போலவே பிட்டாக உள்ளார்.