சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மங்களூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அவர் கூறியதாவது நான் லாரி டிரைவராக வேலை பார்க்கிறேன். எனது மகள் மகளிர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கிறார். மனவளர்ச்சி குன்றிய எனது மகள் கல்லூரிக்கு ஆட்டோவில் சென்று வருவார். கடந்த 2022 ஆம் ஆண்டு எனது மனைவி உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். நான் என் மகளை நன்றாக வளர்த்து வந்தேன். திடீரென உடல் நல குறைவு காரணமாக என் மகள் சிரமப்பட்டார்.

அவரிடம் கேட்டபோது தன்னுடன் பழகிய ஆண் நண்பர்கள் தன்னை படிக்கும் தோழி மூலம் அடிக்கடி வெளியே அழைத்துச் செல்வதாக கூறினார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. நந்தனம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சுரேஷுக்கும் மனவளர்ச்சி குன்றிய மாணவியின் தோழிக்கும் இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபர் மதம் சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் தோழியிடம் மனவளர்ச்சி ஒன்றிய பெண்ணை குறிப்பிட்டு தனக்கு அவரை மிகவும் பிடிக்கும் என கூறினார். உடனே இன்ஸ்டாகிராம் தோழி மன வளர்ச்சி குன்றிய மாணவியை சுரேஷிடம் அறிமுகப்படுத்தி அவரது செல்போன் எண்ணை வாங்கி கொடுத்தார். அதன் பிறகு சுரேஷ் வாட்ஸ் அப் மூலம் அடிக்கடி குறுஞ்செய்தி அனுப்பி தனது காதலை கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மாணவி கல்லூரி வகுப்பை புறக்கணித்துவிட்டு காதலன் சுரேஷுடன் அடிக்கடி வெளியே சென்றுள்ளார். அந்த மாணவிக்கு சாக்லேட் பிடிக்கும்.

இதனால் சுரேஷ் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி பெரிய மேடு பகுதியில் இருக்கும் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஒரு வருடமாகவே சாக்லேட் வாங்கி கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் மாணவி தனக்கு சாக்லேட் வாங்கித் தந்தால் எங்கு வேண்டுமானாலும் வருவாள் என்பதை மனதில் வைத்துக்கொண்டு சுரேஷ் ஒரு திட்டம் தீட்டினார்.

தனது நெருங்கிய நண்பர்களிடம் பேசி மாணவிக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அவர்களுடன் நெருக்கமாக இருக்க ஏற்பாடு செய்தார். மனவளர்ச்சி குன்றிய அந்த மாணவி தனக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் சுரேஷ் சொன்னபடி எல்லாம் கேட்டுள்ளார். இதற்கிடையே மன வளர்ச்சி குன்றிய பெண்ணின் தோழி அந்த ஆண் நண்பர்களின் தவறான செயல்களுக்கு உடந்தையாக இருந்துள்ளார். இந்த விவரம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.