சலூன் கடைகளுக்கு அனுமதி…. டாஸ்மாக்கிற்கு அனுமதியில்லை…. அரசு அதிரடி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதில் தொற்று குறையாத கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் புதிய தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் மற்ற மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் தொற்று குறையாத 11 மாவட்டங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுக்கடைகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *