
பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இந்த கட்சியின் முதல் மாநாடு வக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. விஜய் சினிமாவில் இருந்து விலகி முழு நேரமாக அரசியலில் ஈடுபட உள்ளார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் போட்டியிட உள்ளது. விஜய் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்ததில் இருந்து மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.
2026 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற அனைத்து பணிகளிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் விஜய் பனையூரில் இருக்கும் கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளை நேரில் சந்தித்து நேர்காணல் நடத்த உள்ளார். சற்று முன் விஜய் பனையூர் அலுவலகத்திற்கு வந்தடைந்தார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.