மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் சிறையில் பெண் கைதிகளிடையே மிகப்பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட இந்த வன்முறையில் தற்போதுவரை 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. மோதலை கட்டுப்படுத்த போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.