சற்றுமுன்…. 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டி கோரிக்கைகள் எழுந்தன.

இந்நிலையில் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் 10, 12ம் வகுப்புகளுக்கு ஜனவரி 19-ல் தொடங்கவிருந்த தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து தற்போது 10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதாவது, தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவும், அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *