மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்ததை தொடர்ந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சற்றுமுன் வைகோ அனுமதிக்கப்பட்டுள்ளார்.