அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்குபின், திடீரென்று ஏற்பட்ட நெஞ்சு வலியால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் செந்தில் பாலாஜியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் விரைந்துள்ளார். உடல்நிலை குறித்து கேட்டறிந்த பின் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்திப்பார் என கூறப்படுகிறது.