பதஞ்சலி விளம்பரம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பாபா ராம்தேவ் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். மன்னிப்பை ஏன் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பிய நீதிமன்றம், அதனை ஏற்க மறுத்தது. உச்சநீதிமன்ற உத்தரவை மீறி செயல்பட்டதாக ராம்தேவை கண்டித்த நீதிமன்றம், எதன் அடிப்படையில் உங்கள் நிறுவன மருந்து மற்ற மருந்துகளுக்கு மாற்று என கூறுகிறீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியது.