சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இளங்கலை பட்டப்படிப்பு ( முதல் செமஸ்டர் முதல் ஐந்தாவது செமஸ்டர் வரை), முதுகலை படிப்பு மற்றும் தொழில் சார் படிப்புகளுக்கான தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது.
மாணவர்கள் https://e-governance.unom.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும் மறு மதிப்பீட்டுக்கு ஆகஸ்ட் 6 முதல் 10ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.