தமிழகத்தில் தற்காலிக கணினி பயிற்றுநர்களுக்கு டிசம்பர் மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 2006 முதல் 1880 கணினி பயிற்றுநர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுடைய பனிக்காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைந்த நிலையில் அதனை டிசம்பர் மாதம் வரை நீட்டித்தும் அதுவரை சம்பள பட்டியல் தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு ஊதியம் வழங்கவும் கொடுப்பாணையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.