ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன் பிறகு மார்ச் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் பிப்ரவரி 7-ம் தேதிக்குள் வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று கே எஸ் அழகிரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வெற்றி பெற்ற தொகுதி, அதனால் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் நாங்கள் களம் இறங்குகிறோம் என்று கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்த தொகுதியில் ஈவேரா திருமகன் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.