தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ. 1000 ரொக்கப் பணம் போன்றவைகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் வழங்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் இன்று முதல்வர் ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் இன்று காலை முதல் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் பல இடங்களில் சர்வர் பிரச்சனையின் காரணமாக பொங்கல் பரிசு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு வயதானவர்களுக்கு கைரேகை பதியாததாகவும் புகார்கள் வருகிறது. சர்வர் பிரச்சனையால் பொங்கல் பரிசு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இது தொடர்பாக தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.