சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு… சென்னை சாஸ்திரி பவனில்… மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி…!!!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரி பவனில் 21 நாள்கள் இலவச யோகா பயிற்சி முகாம் தொடங்கப்பட்டது. ஊழியர்கள்  மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியுடன் செயல்படுவதற்கு உணவு இடைவேளையின் போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சியை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் மருத்துவர்கள் அளிக்கின்றார்கள். ஆயிஷ் அமைச்சகத்தால் ஐந்து நிமிட யோகா, தியானம், பிராணாயாமம், ஆசனங்கள், போன்ற யோகா நெறிமுறையை செயலி வழியாக பயிற்சி கொடுக்கப்படுகிறது. இந்த முகாம் ஏற்பாட்டை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *