சர்வதேச போலீஸ் தேடும் குற்றவாளி அவர்…. எப்படி அரண்மனைக்குள் அனுமதி கொடுத்தீங்க…. கடத்தல்காரன் மகன் சரமாரி கேள்வி….!!

சர்வதேச காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளியை அரண்மனைக்குள் அனுமதித்தற்கான  காரணத்தை கூறுமாறு கடத்தல்காரரின் மகன் கடிதம் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் ரொறன்ரோவில் Curtis Hopper என்பவர் தன் மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன் வாழ்ந்து வந்தார். அவர் தன் மகனை கடத்திக்கொண்டு அவரோடு தொடர்பில் இருந்த Teris என்ற பெண்ணுடன் வேறு ஒரு இடத்திற்கு தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து அவர் மனைவி கூறுகையில் திருமணமான சில நாட்களிலேயே பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருந்தது தெரிந்தது என்று கூறினார்.மேலும் கரோல் தன் மகனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தார்.

இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் அவரை 2 ஆண்டு காலமாக தேடி கண்டுபிடித்தனர். அப்போது Curtis Hopper  தன் குழந்தையும், Teris என்ற பெண்ணையும் விட்டு விட்டு தப்பி ஓடினார். குழந்தையை மீட்டு கரோலிடம் ஒப்டைத்த காவல்துறையினர் மகனை கடத்திய வழக்கில்  Curtis Hopper தொடர்ந்து தேடி வருகின்றனர்.இந்த கடத்தல்காரனான Curtis Hopper புகழ்பெற்ற ஓவியர். அதனால் பிரித்தானிய மகாராணியை தன்னை ஒரு ஓவியமாக வரைய வேண்டும் என்பதற்காக Curtis Hopper கடிதம் ஒன்றை எழுதி  அனுபப்பியுள்ளார்.

அதன்படி  1986 ஆம் ஆண்டு CurtisHopper மாளிகைக்குச் சென்று மகாராணியை சிறப்பாக வரைய வேண்டும் என்பதற்காக பல புகைப்படங்களை எடுத்துள்ளார். மகாராணி சிறப்பாக ஓவியம் வரைந்து முடித்த பின் ராஜ குடும்பத்துடன்  விருந்து அளிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தற்போது Curtis Hopper மகனான ஜான்சன் தன் அப்பா என்று நினைக்காமல் ஒரு கடத்தல்காரனை எப்படி அரண்மனைக்குள் நுழைய விட்டார்கள் என்ற கேள்வி கேட்டு கடிதம் ஒன்றை அரண்மனைக்கு அனுப்பியுள்ளார்.

 

மேலும்  Curtis Hopper ஒரு அப்பாவாக இருக்க  தகுதி இல்லாதவர். ஆனால் அவரது  ஓவியங்கள் புளோரிடாவில் ஓரிடத்தில் இருந்து கிடைக்கப்பெற்று பெரும் புகழை அடைந்துள்ளது என்பதை ஒத்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.ஆனால் அவர் எவ்வளவு தான் சிறந்த ஓவியராக இருந்தாலும் அவரை எப்படி அரண்மனைக்குள் அனுமதித்தீர்கள் என்ற கேள்வி கேட்டு அரண்மனைக்கு அனுப்பிய கடிதத்திற்கு இன்று வரை அரண்மனையில் இருந்து எந்தவித பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *