முதலில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் விஜய் ஆண்டனி. இவர் கடந்த சில நாட்களாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர்கள் சந்திப்பு, மூவி பிரமோஷன் என எந்த விழாவிற்கு சென்றாலும் செருப்பு இல்லாமல் காணப்பட்டார். இது குறித்து தொகுப்பாளர் ஒருவர் கேள்வி கேட்க விஜய் ஆண்டனி செருப்பு இல்லாமல் நடந்து பார்த்தேன்.   அது எனக்கு பிடித்திருந்தது எனக்கூறி இருந்தார்.

மாற்றம் வேண்டும் என்றால் செருப்பு இல்லாமல் நடந்து பாருங்கள் எனக் கூறியிருந்தார். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும் மருத்துவ ரீதியாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. செருப்பு இல்லாமல் நடந்தால் அக்ஷ்டமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும் என எச்சரித்துள்ளனர்.