சரியான நேரத்தில் பதிலடியா…? விஜய் போட்ட பிள்ளையார் சுழி….பீதியில் அதிமுக, பாஜக …!!

சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் விஜய்க்கு ஆளும் கட்சிகள் நெருக்கடி கொடுத்ததற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தனர் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். நடிகர் அஜித், சூர்யா, ரஜினி, கமல் ஆகியோர் தங்கள் குடும்பத்துடன் வந்து தங்களது வாக்கு பதிவினை செலுத்தி தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இதனிடையே நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார்.

அவரது இந்த செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நடிகர் விஜய் வாக்களித்துள்ளார் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் ட்விட்டரில் #PetrolDieselPriceHike என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இது ஆளும் மத்திய மாநில கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தது அரசியல் ரீதியாகவும் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக நடிகர் விஜயின் சர்க்கார், மெர்சல் படம் வெளியானபோது ஆளும் அதிமுக மற்றும் மத்திய பாஜக அரசு படத்திற்கு பல இடையூறுகளை கொடுத்தனர். இதனால் விஜய் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் விஜய் கூட சர்க்கார் படத்தின் பேனர்களை கிழித்த போது என்னுடைய பேனர்களை கிழியுங்கள், ஆனால் என் ரசிகர்களை அடிக்காதீர்கள் என்று கூறியிருந்தார்.

ஆளும் கட்சிக்கு எதிராக பல கருத்துகளையும் விஜய் தெரிவித்திருந்தார். சர்க்கார் மற்றும் மெர்சல் படத்தில் அவருக்கு பல இடையூறுகளை கொடுத்ததன் காரணமாக அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் பெட்ரோல் டீசல், விலை உயர்வை நினைவூட்டும் விதத்தில் சைக்கிளில் வந்து வாக்களித்துள்ளார் என்று விஜய்யின் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.