சரியாக வாக்குச் செலுத்தி இருக்கிறீர்களா…? தெரிந்துகொள்ள விவிபாட் இயந்திரம்..!!

நீங்கள் வாக்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதை தெரிந்துகொள்ள விவிபாட் என்ற இயந்திரத்தை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ஒவ்வொரு தொகுதிகளிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றது. பல்வேறு இடங்களில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதால் அதையும் தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் வாக்கு செலுத்திய பிறகு விவிபாட் இயந்திரத்தில் உங்களின் வேட்பாளர் பெயர், வரிசை எண், சின்னம் ஆகியவை 7 வினாடிகளில் தோன்றும். நீங்கள் வாக்கை சரியாக செலுத்தி இருக்கிறீர்களா என்பதையும் அதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.