சரக்கு பாட்டிலுடன் வகுப்பறைக்கு வந்து…. “மதுபோதையில் பாடம் எடுத்த பெண் ஆசிரியர்”….. அதிர்ச்சி சம்பவம்….!!!!

மதுபோதையில்  மாணவர்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் குடி போதையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திய அரசு பள்ளி ஆசிரியை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். கர்நாடக மாநிலம் தூமக்கூர் என்ற பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியரான கங்கா லக்ஷ்மம்மா என்பவர் பள்ளியில் மது பாட்டில்களை கொண்டு வந்து மது அருந்தியபடி பாடம் நடத்தி வந்துள்ளார். இதனை ஆசிரியர்கள் மற்றும் மாணவிகளின் பெற்றோர் கண்டித்தும் அதனை கங்கா கண்டு கொள்ளவில்லை.

தொடர்ந்து மது குடித்துவிட்டு பாடம் எடுத்து வந்ததால் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு வருகை தந்த கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் கங்கா லக்ஷ்மம்மாவின் வகுப்பறைக்கு சென்ற அவர்கள் வகுப்பறையில் சோதனை செய்த போது மேஜை டிராயரில் மது பாட்டில் வைத்திருப்பது தெரிய வந்தது. அவரும் குடிபோதையில் தான் இருந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த ஆசிரியை பணியிடை நீக்கம் செய்த கல்வித்துறை அதிகாரிகள் பின்னர், விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.