தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதால் தளபதி 69 படத்தோடு சினிமாவிலிருந்து விலக இருக்கிறார். இவர் தற்போது தன்னுடைய 68 ஆவது படமான தி  கோட் படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்துவரும் நிலையில் அடுத்த படத்தை இயக்குனர் எச்‌. வினோத் தான் கண்டிப்பாக இயக்குவார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான DVV என்டர்டைன்மென்ட் நிறுவனம் தளபதி 69 படத்தை தயாரிக்க முன்வந்த நிலையில் அதிலிருந்து பின்னர் விலகியது. அதாவது பட அறிவிப்புக்கு முன்பாகவே தயாரிப்பு வேலைகளை தொடங்கியதால் நடிகர் விஜய் தயாரிப்பு நிறுவனத்தை நிராகரித்துவிட்டார் என்று தகவல் வெளியானது. ஆனால் தற்போது பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி நடிகர் விஜய் அதிக சம்பளம் கேட்டதால்தான் அந்நிறுவனம் வெளியேறியதாக கூறியுள்ளார். அதாவது தி கோட் படத்திற்காக 200 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் விஜய் அடுத்த படத்திற்கு 250 கோடி சம்பளம் கேட்டுள்ளார். மேலும் சம்பள விஷயத்தில் நடிகர் விஜய் இறங்கி வராததால் தான் அந்நிறுவனம் வெளியேறியதாக அவர் கூறியுள்ளார்.