தமிழகத்தில் அரசு குறித்தும் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அவதூறு செய்வோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர் அதன்படி நேற்று பாஜக மாநில செயலாளர் சூர்யா கைது செய்யப்பட்டு அதற்கு பாஜக அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அதிமுகவின் ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டு இபிஎஸ் சந்தனம் தெரிவித்தார். இந்நிலையில் நேற்று பாஜக நிர்வாகிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நாட்களாக பலரும் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.