இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக், டுவிட்டர், youtube போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஏராளமான நன்மைகள் இருந்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கிறது. குறிப்பாக போலியான செய்திகள் மக்களிடம் விரைவில் பரப்பப்படுகிறது. இதனால் அவ்வப்போது பல்வேறு சர்ச்சைகள் எழுவதால் சமூக வலைதளங்களின் மீதான புகார்களை பயனர்கள் நிறுவனத்திடம் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புகார்களை விசாரிப்பதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் குறைதீர் தீர்ப்பாய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியின் மூலம் பெறப்படும் புகார்களுக்கு அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தற்போது புகார் வந்துள்ளது. இதன் காரணமாக நிறுவனங்களின் குறை தீர்ப்பு அதிகாரிகள் தெரிவிக்கும் முடிவுகள் குறித்து பயனர்கள் புகார் தெரிவிக்க 3 கமிட்டிகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் இந்த கமிட்டி மார்ச் மாதம் முதல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.