ஈரோடு கிழக்கு தொகுதியில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது. நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இங்கு திமுக, அதிமுக உள்ளிட்ட 77 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஒரு கட்டுப்பாட்டு கருவி மற்றும் ஒரு வி.வி.பேட் எந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்குப்பதிவு முழுவதுமாக கண்காணிக்கப்படுகிறது.
இதற்கான பிரச்சாரம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அங்கிருந்து தொகுதி சாராத நபர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டனர். இடைத்தேர்தல் நடத்தை விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்து ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. அதில் தேர்தல் தொடர்பாக சமூக வலைதளங்களில் விளம்பரங்கள் செய்யக் கூடாது. மீறினால் 2 ஆண்டு சிறைக்கு வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது.