“சமந்தாவை சந்தித்த பிரபல இசையமைப்பாளர்”…. இணையத்தில் போட்டோ வைரல்…!!!!

நடிகை சமந்தாவை பிரபல இசையமைப்பாளர் சந்தித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்நிலையில் மலையாள சினிமா உலகின் பிரபல இசையமைப்பாளரான சேஷம் அப்துல் வஹாப் சமந்தாவை சந்தித்துள்ளார். சமந்தா மற்றும் விஜய் தேவர்கொண்டா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு இவர் இசையமைக்க உள்ளார்.

மேலும் இத்திரைப்படத்தை சிவ நிர்வாணா இயக்க மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றது. படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் துவங்க உள்ளதாக கூறப்படுகின்ற நிலையில் ஜெயராம், சச்சின் கெடகர், முரளி சர்மா, லட்சுமி, அலி, ரோகிணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார்கள். இந்தநிலையில் சமந்தாவை இசையமைப்பாளர்  சேஷம் அப்துல் வஹாப் சந்தித்தது பரவலாக பேசப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *