“சபரிமலை வரை” ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக விளம்பரம்… தனியார் நிறுவனத்திற்கு கேரள ஐகோர்ட் கண்டனம்…!!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த வாரம் நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹெலி  கேரளா என்னும் நிறுவனம் இணையதளத்தில் விளம்பரம் ஓர் விளம்பரத்தை கொடுத்தது. அதில் கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும்  கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் வி.ஐ.பி தரிசனம் செய்வது வரை அனைத்திற்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தை பார்த்த கேரள ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் அணில் கே.நரேந்திரன், அஜித்குமார் போன்ற அடங்கிய அமர்வு  முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேவசம் போர்டின் அனுமதி இல்லாமல் சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை விளம்பரம் செய்த நிறுவனத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் சபரிமலை என்னும் பெயரை எழுத கூடாது எனவும் ஐகோர்ட் தெளிவுபடுத்தி உள்ளது. இந்நிலையில் விளம்பரத்தை நிறுத்திவிட்டதாக சம்மந்தபட்ட நிறுவனத்தின் சார்பாக ஆஜரான வழக்கரிஞர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply