கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மண்டல மற்றும் ‌மகர விளக்கு சீசனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை புரிவார்கள். அதாவது பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை திருக்கோவிலுக்கு அணிவார்கள்.

இந்த காலங்களில் வழக்கத்தை விட சபரிமலை ஐயப்பன் திருக்கோவிலில் கூட்டம் என்பது அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாக ஒரு நாளைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ததன் அடிப்படையில் 70000 பக்தர்களுக்கும், உடனடி தரிசனம் முன்பதிவு அடிப்படையில் 10,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தான தலைவர் பிரஷாந்த் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த காலங்களில் சபரிமலை திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆதார் அட்டை என்பது ஒரு கட்டாய ஆவணம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் கண்டிப்பாக ஆதார் அட்டையை கையில் எடுத்து வர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.