பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஒரு மணி நேரத்தில் 4500 பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தற்போது பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி வருகிறார்கள். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் ஐயப்பன் கோவிலில் தற்போது மகரவிளக்கு பூஜை நடைபெற்று வரும் நிலையில், இந்த பூஜையை முன்னிட்டு ஒரு மணி நேரத்தில் 4500 பக்தர்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது பக்தர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.